என்ன சமாச்சாரம்…?? எண்ணெ(ய்) சமாச்சாரம்…..!! – பகுதி – 2

சென்ற பகுதியில நம்ம முன்னோர்கள்லாம் எப்படி எண்ணெய் எடுத்தாங்கன்னு பார்த்தோம் (அதை இங்க வாசிக்கலாம்https://goo.gl/DZuPhj  https://goo.gl/Hv8y3s )

எப்படி நவீன முறைகள்ல எண்ணெய் எடுக்குறாங்கன்னு பார்க்குறதுக்கு முன்னாடி, உலகம் நவீனத்துக்கு மாறிட்டே இருந்ததுல, மக்கள் மனநிலையிலயும், சமூகத்திலேயும் என்னென்ன மாற்றங்கள் வந்துச்சுன்னும் மேலோட்டமா தெரிஞ்சுக்குவோம். இது உணவு வியாபாரத்தை பற்றி ஆழமா தெரிஞ்சுக்க உதவும்.

விவசாயத்துல நவீனம்ங்குற பேர்ல சில அதி மேதாவிகள் இரசாயனங்களையும், அவுங்க குடுக்குற வீரிய விதைகளையும் வச்சு தான் விவசாயம் பண்ண முடியும்னு நம்ப வச்சு, இரசாயனங்களையும், உயிர்  கொல்லிகளான பூச்சி கொல்லிகளையும், களை கொல்லிகளையும், வீரிய விதைகளையும் வித்துக்கிட்டே இருந்தாங்க.  இதில் சமீப வருகை தான் மரபணு மாற்று விதைகள்.  இந்த இரசாயணங்கள்லாம் ஸ்டிராய்ட்ஸ்ன்னு சொல்லப்படுற ஊக்க மருந்து மாதிரி தாங்க. உடனடியா பலன் தெரியும், ஆனா நாள்பட நாள்பட எதிர்மறையா செயல்படும்.

உயிரை கொடுத்தாலும் விதைகளை பத்திரமா பாதுகாத்த சமுதாயம்,  விதைகளுக்கும், நாற்றுகளுக்கும் ஏதோ விதை நிறுவனத்தை நம்பும் அவல நிலைக்கு வந்துட்டோம்.

விவசாயம் குறுகிட்டே வந்துச்சு. விவசாயம் பார்த்தாலே நட்டம்ங்குற நிலைமை பலபேருக்கு வந்துச்சு. .விவசாயிகள் வேலை தேடி பக்கத்துல இல்ல தூரமா இருக்குற டவுணுக்கோ, நகரத்துக்கோ கூலி வேலைக்கு போயி, அவுங்க கொழந்தைங்கள எல்லாம் நல்ல இங்கிலீஸு பள்ளிக்கூடத்துல படிக்க வச்சு எப்படியாவது ஒரு குமாஸ்தாவாகவோ, சூப்பர்வைசராகவோ, மேனேஜராவோ, எஞ்சினீயராவோ, ஒரு நவீன வைத்தியராவோ ஆக்கிரனும்னு முடிவு பண்ணிட்டாங்க.

பொருளாதாரத் துறையில் என்னாச்சுன்னா, அரசாங்கங்கள்லாம் கரன்சி அச்சடிக்குரதுக்கு அந்த நாட்டோட தங்க இருப்புக்கேத்தாப்ல (Gold Standard) அச்சடிக்குறத நிறுத்திட்டு, இஷ்டத்துக்கு அச்சடிக்க ஆரம்பிச்சிடாங்க. அதனால பணப் புழக்கம் அதிகமாகி பணத்தோட மதிப்பு குறஞ்சுட்டே வந்துச்சு. அதாவது இந்த வருஷம் 100 ரூபாய்க்கு என்ன வாங்குறீங்களோ, அடுத்த வருஷம் அதே பொருட்களை வாங்கணும்னா 100 ரூபா இருந்தா பத்தாது…இன்னும் அதிகம் வேணும். இப்படி பணத்தோட மதிப்பு வேகமா குறைய குறைய அத்தியாவசியப் பொருட்கள் விலை கடுமையா கூட ஆரம்பிச்சுச்சு. *உறுப்படியா ஒன்னும் பண்ணாம அடுத்தவன் உழைப்பை திருடுற வட்டித் தொழில், அதாங்க வங்கிகள், நல்லா வளந்துச்சு.* சும்மா பாருங்க உங்களை சுத்தி எத்தனை வங்கிகள் , எத்தனை கிளைகள்னு..?. இஷ்டத்துக்கு கடன் கொடுக்க ஆரம்பிச்சாங்க. ஆனா, கடனுக்கு அடமானமா அசல் பணமான தங்கத்தையும், நிலத்தையும், அரசாங்க பத்திரங்களை மட்டும் தான் ஏத்துக்குவாங்க.

சீக்கிரம் கெட்டு போகுற விளைபொருட்கள் பயிர் செஞ்சவுங்க கடன் வாங்குனா தொலைஞ்சாங்க. இவுங்க உழைப்பையும், விளைபொருட்களையும் என்ன விலைக்கு விக்கணும்னு இடைத்தரகர்களும், பெரும்பணக்காரர்களும் தான் முடிவு பண்ண ஆரம்பிச்சாங்க.

இன்னொரு பக்கம் விதவிதமான பொழுது போக்கு அம்சங்களும் அதைசார்ந்த விளம்பர யுக்திகளும் பெருகுச்சு. *மனுசனை உணர்ச்சிவசப்படுத்துனா போதும், எதையும் அடைஞ்சுறலாம்ங்குறது தான் அந்த யுத்தி – வியாபாரம், அரசியல்னு எல்லாத்துக்கும் இந்த யுக்தி பொருந்தும்*.   உதாரணத்துக்கு இந்தியால கிரிக்கெட் விளையாட்டுகளை நடத்துறது ஒரு தனியார் அமைப்பு. அவுங்க அணியில யார் விளையாடணும்னு தேர்ந்தெடுக்குறது எப்படின்னு யாருக்கும் தெரியாது. முழுக்க அரசியல். ஆனா, அவுங்க அணியில விளையாடுர பசங்க டி- ஷர்ட்டுல ’இந்தியா’ ன்னு பேர் மட்டும்  போட்டா போதும் – நம்ம தேசபக்திய காமிக்க லீவு போடுவோம், எவ்வளவு ரூவா டிக்கெட்னாலும் போய் விளையாட்டை பார்ப்போம், இந்த அணி ஜெயிச்சா, நம்ம காசை கரியாக்கி பட்டாசு கொளுத்துவோம். அதை சார்ந்து விதம் விதமா செலவு செய்வோம். உணர்ச்சிப்பெருக்குல நாம எல்லாம் தனித்தனியா கொஞ்சம் கொஞ்சமா செலவு செய்வோம்..அவுங்க மொத்தமா கோடிகோடியா சம்பாதிப்பாங்க. சூப்பர் டெக்னிக்ல..?? இந்த பொழுது போக்கு அம்சங்கள் மக்கள் மனசுல பெரும் மாற்றங்களை ஏற்படுத்துச்சு.  சினிமாக்காரங்க மாதிரி அழகா அலங்காரம் பண்ணி சுத்துற கூட்டம்னா தான் மரியாதை!!. சோப்பு, சீப்பு,  கண்ணாடி, தோல் பெல்டு, சூவு , விதவிதமா உடுப்புகள், நாத்த மருந்து அதாங்க செண்டு….ன்னு என்ன அலங்காரப் பொருட்கள் வித்தாலும் எம்புட்டு விலை சொன்னாலும், அதை விக்குறதுக்கு ஒரு சினிமாகாரரோ, கிரிக்கெட் ஆடுற சின்ன பையனோ போதும், நம்ம மக்கள் வாங்கிருவாங்க.

இதெல்லாத்தையும் விட ஒரு மிகப்பெரிய ஒரு விற்பனை யுக்தி ஒண்ணு இருக்குது….. ரீஃபைன்டு எண்ணெயை சந்தைப் படுத்துனது பற்றி  பார்க்கும் போது அதைப் பற்றி விலாவாரியா அலசுவோம்.

நம்ம மக்களோட இன்னொரு மனநிலையையும் நாம இங்க கவனிக்கனும்.. நம்ம ஒரு 200 வருசமா வெள்ளைகாரன்கிட்ட அடிமையா வேற இருந்துருக்கோம். அந்த அடிமை மனப்பாண்மை லேசுல போயிறுமா..? வேகுற வெயில்லயும் அவனை மாதிரியே டை போட்டு சுத்துவோம்ல.!!

எதுவுமே வெள்ளையா இருந்தா தான் வாங்குவோம்….அரிசி வெள்ளையா இருக்கணும், காய்கறி பளிச்சுன்னு சோப்பு போட்டு கழுவுன மாதிரி இருக்கணும், கட்டிக்குற பொண்ணோ மாப்பிள்ளையோ கூட வெள்ளையா தாங்க இருக்கணும். அதேபோல எண்ணெயும் பார்க்க அழகா இருக்கணும்…தெளிவா தண்ணி மாதிரி இருக்கணும். .ஊத்தி வச்சிருக்குற பாத்திரம் உள்ள அப்படியே தெரியனும்னு மக்கள்கிட்ட விதவிதமான எதிர்பார்ப்புகள்.

ஒரு பக்கம் உணவு உற்பத்தி குறைவு, இன்னொரு பக்கம் தொழில் மட்டுமே சார்ந்த நகரங்களின் வளர்ச்சியும் அதை சார்ந்த உணவு தேவைகளின் பெருக்கமும் நடந்தது. நகரங்களில் இருப்போர்க்கும் – இல்லாதோர்க்குமிடையே உள்ள இடைவெளியும் கூடிட்டே இருக்குது. மலிவா இருக்குறதை மட்டுமே வாங்க முடியும்ங்குற அளவுக்கு ஒரு பெருங்கூட்டம் எல்லா நகரங்களிலும் உருவாகுது. இப்படி எல்லாம் உலகம் மாறியிருக்கும் போது… மெதுவா செக்கை ஓட்டி, அதுக்கு கருப்பட்டி போட்டு, கூலியும் கொடுத்து, மாட்டையும் பராமரிச்சு,  ஒரு நாளைக்கு வெறும் 30 லிட்டர் எண்ணெய் எடுத்து, ஒரு விலையைச் சொன்னா இந்த ஜணம் எப்படி வாங்கும்..? திங்குறதுக்கா இவ்ளோ விலைன்னு கேக்காதா..?.   ஏனோ வெளித்தோற்றத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை உணவுக்கு கொடுக்க மறந்துட்டோம்ங்க….!!  அப்படி வேலை ஆட்களையும், எண்ணெய் எடுக்குற நேரத்தையும் குறைச்சு, எடுக்குற எண்ணெயோட அளவையும் கூட்டி , எண்ணெய் விலையை குறைக்க வந்ததுதாங்க இரும்பு செக்கு, எக்ஸ்பெல்லர், அதிநவீன சால்வெண்ட் எக்ஸ்ட்ராக்ஷன் மற்றும் எண்ணெயில் கலப்படங்கள்!!

இவற்றைப் பற்றி அடுத்தடுத்த பகுதிகள்ல பார்க்கலாம்ங்க…

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s