என்ன சமாச்சாரம்…?? எண்ணெ(ய்) சமாச்சாரம்…..!! – பகுதி – 3

முந்தைய பகுதிகளின் இணைப்புகள் கட்டுரையின் முடிவில்.

இரும்பு செக்குல உரலும் , கல்லும் இரும்பால செஞ்சிருக்கும். நல்லா வேகமாவே சுத்தும். ஒரு நிமிசத்துக்கு 30 லிருந்து 36 சுற்று சாதாரணமா சுத்தும். பாரம்பரிய செக்குகளை விட சுமார் 4 மடங்கு உற்பத்தி அதிகமாகவே இருக்கும். (பாரம்பரிய செக்குகள் நிமிடத்துக்கு 9 ல இருந்து 12 சுற்று தான் சுத்தும்). இந்த இரும்பு செக்குகள் விதைகளை நசுக்காது; அரைக்கும். இரும்பு செக்கு ஓட்ட ஆரம்பிச்சு, ஒரு அரை மணி நேரத்துலயே எண்ணெய் எடுத்தரலாம். என்ன ஒன்னு எண்ணெய் நல்லா சூடாகிறும். டின்ல பிடிச்ச எண்ணெயயை கொஞ்சம் ஆர வைச்சு தான் தூக்க முடியும். புண்ணாக்கை வெறும் கைல அள்ள முடியாது அவ்ளோ சூடா இருக்கும். ஒரு சாக்கை வச்சுதான் புண்ணாக்கை அள்ளுவாங்க. இந்த சூட்டுல எண்ணெய்ல உள்ள பல நுண்சத்துக்கள் ஸ்வாஹா ஆகிறும் (காணாம போயிறும்). வர்ர எண்ணெய் உங்களுக்காக ஏற்கனவே சூடு பண்ணி லேசா சமைச்சிருக்கும் … அவ்ளோ தான்..!!

சில செக்கு ஓட்டுறவுங்க கருப்பட்டிக்கு பதிலா செல்லமா ’பாணி’ ன்னு சொல்ற மொலாஸ்ஸஸ் போடுவாங்க. அதென்ன மொலாஸ்ஸஸ் .?? சர்க்கரை ஆலை கழிவுதாங்க மொலாஸ்ஸஸ். பச்சையா இருக்குற கரும்புச்சாரை வெள்ளையா, மணல் மாதிரி ஒன்னோடொன்னு ஒட்டாம, ஒரு வாசமும் இல்லாம, சீனியா மாத்துனதுல வர்ர கழிவு பொருள். சீனி செய்ய எவ்ளோ இரசாயனங்கள் பயன் படுத்துனாங்களோ, அவ்ளோ இரசாயனத்தோட நச்சுத்தன்மையும் அதுல அடங்கி இருக்கும்ங்க. வெல்லப் பாகு மாதிரி பிசுபிசுன்னு இருக்கும். நல்லா புளிச்ச வாடை வரும். கருப்பட்டிக்கு பதிலா இதைப் போட்டாலே எண்ணெய் எடுத்துறலாம், விலையும் ரொம்ப மலிவு.

இந்த மொலாஸ்ஸஸோட இன்னொரு முக்கியமான பயன்..ஆமாங்க பயன் என்னன்னா.. சாராயம் செய்யுறதுக்கு இது தாங்க மூலப்பொருள். வெளிநாட்டுலயும் குடிகாரங்க இருக்காங்க நம்மூர்ல சாகுற மாதிரி நிறைய குடிச்சு சாகுறவுங்க அங்க ரொம்ப கம்மி. ஏன்னா இந்தியாவுல தயாரிக்குற சாராயம் மொத்தமும் (ஒரு சிலதை தவிற), இந்த மொலாஸ்ஸஸ்ல தாங்க செய்ய்யுறாங்க..அவ்ளோ இரசாயன விஷம் இருக்குங்க அதுல. இன்னொன்னு கேட்டுக்கோங்க. வெள்ளை சீனி தயாரிக்குறதே சாராயத்துக்காகத்தானாம்!! வெள்ளை சீனியும் அதுல செஞ்ச பண்டங்களையும் உங்க உடம்புக்குள்ளயோ உங்க குழந்தைங்க உடம்புக்குள்ளயோ அனுப்புறதா வேண்டாமான்னு நீங்க தாங்க ஆராய்ஞ்சு முடிவு பண்ணிக்கணும்.

அடுத்தது எக்ஸ்பெல்லர். எக்ஸ்பெல்லர்ல ஒரு நாள்ல சும்மா 1000 கிலோவிலிருந்து 1.50 லட்சம் கிலோ விதையை கூட எண்ணெய் ஆக்கிறலாம். இதுல எண்ணெய ரொம்ப சீக்கிரம் எடுக்குரதுக்காக முதல்ல விதைகளை எல்லாம் மேல் தோல் நீங்குற அளவுக்கு நல்லா அரச்சிறுவாங்க. அப்புறம் தண்ணீரை ஆவியாக்கி அரைச்ச விதைகளை ஆவியில லேசா வேக வைப்பாங்க. அப்புறம் நல்ல அழுத்தி பிழிஞ்சா எண்ணெய் வந்துரும். ஆனா இந்த அழுத்தம் ரொம்ப அதிகமா இருக்குறதால எண்ணெய் 100 – 200 டிகிரி செல்சியஸ் வரைக்குமே சூடாகிறும். இதனால இந்த எண்ணெய்ல இருக்குற முக்கியமான நுண்சத்துக்கள் எல்லாம் அழிஞ்சு போயிறும். நல்லா தண்ணி மாதிரி லேசா இருக்கும் எண்ணெய். எக்ஸ்பெல்லெர் எண்ணெய்ங்குறது ஏற்கனவே சமைச்ச எண்ணெய்க்கு சமம்ங்க!!

சமையலுக்கு பயன்படுத்துற மிளகு, சீரகம் அது இதுன்னு எதையெடுத்தாலும், தனித்தனியா இருக்கும் போது வாசம் கம்மியாதாங்க இருக்கும். ஆனால், சமைக்கும் போது சூட்டுல வாசம் கமகமக்கும் இல்லீயா? அதே மாதிரி தாங்க பாரம்பரிய செக்கு எண்ணெயும். ரொம்ப சூடு ஆகாததனால, நல்லா அடர்த்தியா இருக்குறதோட, மணமும் கம்மியாதாங்க வரும். ஆனா, சமைக்கும் போது, சூடேறும் போது தான் அற்புதமா மணம் வீசும். சமைக்கப்படாம உயிரோட இருக்கேன்னு நிரூபிக்க பொங்கிப் பொங்கி வரும்ங்க!!

********************************
முந்தைய பகுதிகளின் இணைப்புகள் :
பகுதி 1 – Facebook  WordPress
பகுதி 2 – Facebook WordPress 
மேலும் உடல்நலம் சார்ந்த பதிவுகளுக்கும், இத்தொடரின் அடுத்த பதிவுகளுக்கும், எங்கள் Sugham முகநூல் பக்கத்தை தொடரவும்!!
பயனுள்ள பதிவை உங்கள் நட்பு வட்டத்திற்கும் பகிருங்கள்!!
***************************************

Advertisements

வாழ்க்கைக்கு 2 உபதேசங்கள்

அடியேனின் அகப் பயணத்தை துவக்கியவர் வேதாத்திரி மகரிஷி அவர்கள். அவரது 2 உபதேசங்கள் எனது வாழ்க்கையில் பல வகையில் உதவுகின்றன.

அந்த பாடங்களையும் அடியேனது புரிதல்களையும் பகிர்கிறேன்.

 

1. எதிர்பார்ப்பு வேண்டாம்

எதிர்பார்ப்புகளே ஏமாற்றத்தை கொடுப்பது. ஆதலால் எந்த எதிர்ப்பார்ப்பும் இன்றி கடமைகளை செய்யுங்கள். நம் செயல்களுக்கு ஏற்ப பலன்கள்/விளைவுகள் வருவது உறுதி.

 

2. யாரையும் மாற்ற நினைக்க வேண்டாம்

உண்மையில் ஒருவரை மட்டும் தான் நம்மால் மாற்ற இயலும்…நம்மை  மட்டும் தான். நம் வாழ்க்கைத் துணையையோ , குழந்தையையோ(/களையோ) கூட மாற்ற இயலாது. ஏனெனில் ஒவ்வொருவரும் தனித்துவம் வாய்ந்தவர்கள். மற்றவரை மாற்ற  முயற்சித்து நமது காலத்தையும், ஆற்றலையும் வீணடிக்க வேண்டியதில்லை. மாற்றம் அகத்திலிருந்து வரவேண்டும். தேடுதல் உள்ளவர்களுக்கு அது  அவர்களுக்குள் ஊற்றெடுக்கும்.

 

எளிமையான ,ஆனால் மிகவும் சக்திவாய்ந்த இரு பாடங்கள்.:)